சின்னத்திரையில் நயன்தாரா? இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா?

30 வயதை தாண்டிய நிலையிலும் ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் விஜய் 63 என தமிழ்சினிமாவில் பிசியான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இப்படி உட்காரவே நேரமில்லாமல் பிசியாக இருப்பவரைப் பற்றி விரைவில் ”நயன்தாராவை கலர்ஸ் டிவி தமிழில் பார்க்கலாம்” என்று அந்த சேனல் சார்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

நயன்தாரா சில டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தாலும், எந்த சேனலுக்கும் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கியதில்லை. இதனால் நயன்தாரா கலர்ஸ் டிவியில் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.

அது என்னவாக இருக்கும் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு கருத்தை பரிமாறிக்கொண்ட நிலையில் அந்த சஸ்பென்ஸை உடைத்திருக்கிறது கலர்ஸ் டிவி.

அதாவது நயன்தாரா கலர்ஸ் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. மாறாக அவருடைய நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை வரும் மே 12 -ம் தேதி ஒளிபரப்பப் போகிறது கலர்ஸ் டிவி.

இதுவரை வெறும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த கலர்ஸ் டிவி முதல் முறையாக திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது. அதில் முதல் படமாகத்தான் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். அதற்குத்தான் இவ்வளவு பில்டப்பாம்.

colors tv tamilMovie NewsNayanthara
Comments (0)
Add Comment