வித்யுலேகாவைத் தெரியும் தானே?
கெளதம் மேனன் இயக்கிய ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர். குண்டுப் பெண்ணாக இருந்தவர் தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வீரம்’, ‘புலி’ போன்ற படங்களில் காமெடி கேரக்டர்களிலும், பல படங்களில் நாயகிகளின் தோழியாகவும் முகம் காட்டினார்.
நடித்த படங்கள் எல்லாமே பெரிய பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பதால் அதை வைத்தே தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருந்தவர் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் சந்தானம் மனைவியாக ஏற்று நடித்த கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. பாராட்டுகள் தான் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் இந்த ஆண்டு தமிழில் ஒரு படம் கூட வித்யுலேகாவுக்கு அமையவில்லை.
சென்னைப் பெண்ணான தனக்கு தமிழில் வாய்ப்பில்லேயே என்கிற கவலையில் இருந்தவர் தற்போது எடுத்திருக்கும் அவதாரத்தைப் பார்த்து கோலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
தனது அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார் வித்யுலேகா. இதன் மூலம் காமெடி நடிகையாக வலம் வந்த தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் இனி கவர்ச்சி கோதாவில் இறங்க முடிவெடுத்து விட்டதாகவேத் தெரிகிறது.
வித்யுலேகாவின் கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் உனக்கு ஏம்மா இந்த வேண்டாத வேலை? கவர்ச்சி உனக்கு செட்டாகவில்லை, புகைப்படங்கள் படு ஆபாசமாக இருக்கிறது என்று கமெண்ட்டுகளால் வருத்தெடுத்து விட்டார்கள்.