நயன்தாரா திரைவாழ்வில் மைல்கல்லாக அமைந்த இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான “மாயா” படம், நயன்தராவின் அற்புதமான நடிப்பிற்காகவும், அழுத்தமான கதைக்காகவும் பரபர திரைக்கதைக்காகவும் பெரும் புகழ் பெற்றது. இந்த வெற்றிக்கூட்டணியான நயன்தாரா மற்றும் இயக்குநர் அஷ்வின் சரவணன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். “Connect” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். பரபர தருணங்கள் நிறைந்த ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புதிய சினிமா அனுபவத்தை தரும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் பங்குகொள்கிறார்கள். பாலிவுட் பிரபலமான அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்
தமிழ் சினிமா இயக்குநர்களில் நம்பிக்கையூட்டும் திறமைசாலிகளில் ஒருவராக தன் இடத்தை பதிவு செய்திருக்கும் அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் காவ்யா ராம்குமாருடன் இணைந்து கதையும் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்,