நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும்‘கஸ்டடி’ !

தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புது வருடத்தை ஒட்டி வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.தற்போது படப்பிடிப்பு அதனுடைய கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை ரேவதி என படக்குழு அறிவித்துள்ளது. அவரது கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு, ‘அழகும் திறமையும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த போஸ்டர் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

Actor chaitanya akkineniActress KrithiShettyCustody movieDirector Venkat Prabhu