கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை-அபர்ணாதாஸ்!

கவின் -அபர்ணாதாஸ் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10, 2023 ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.படத்தில் இருந்து வெளியான ஹிட் பாடல்கள் மற்றும் அதன் காட்சிகள் அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. கவின் மீது ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் குறிப்பாக பெண் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் இந்த படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட இதன் ஆடியோ மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் கதாநாயகி அபர்ணாதாஸ் பேசியதாவது,

“கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமால் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.

Actor KavinActress AparnaDasDada movie