ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படம் ரஜினி நடிக்கும் 167-வது படமாகும்.
ரஜினிகாந்த் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன் முதலாக இணையும் இந்தப்படத்தை ‘2.0’ எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு பிறகு ரஜினியோடு லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது.
இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே ரஜினியோடு மூன்று படங்களில் நடித்த நயன்தாரா 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
பேட்ட படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினி பேட்ட படத்தில் வந்ததைப் போல தெரிந்தாலும், படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும், சமூக சேவகராகவும் வருகிறாராம். அதோடு ரஜினி கெட்டப்புக்கான விக் அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அவருக்கு மகளாக கமலின் ‘பாபநாசம்’ படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டு வேறொரு நடிகையை தேடி வருகிறார்களாம்.
‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்கி முழுப்படப்பிடிப்பும் அங்கேயே நடக்க உள்ளது. இதற்காக 90 நாட்களும், யோகிபாபு 40 நாட்களும், நயன்தாரா 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள்.
வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வருகிறது.