கடும் குளிரில் பட்ட கஷ்டங்கள்! : ‘உரு படக்குழுவினரைப் பற்றி உருகிய தன்ஷிகா

‘கபாலி’யில் ரஜினிக்கு மகளாக எண்ட்ரி போட்ட பிறகு சினிமாவில் தனக்கான லைன் எது என்பதை சரியாகப் பிடித்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்து விட்டார் நடிகை தன்ஷிகா.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘எங்க அம்மா ராணி’ படத்துக்குப் பிறகு ‘வையம் மீடியா’ தயாரிப்பில் கலையரசனுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘உரு.’

அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கும் இப்படத்திற்காக தான் பட்ட கஷ்டங்களைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த கஷ்டமான சூழலிலும் மொத்தப் படக்குழுவும் எனக்கு ஓடி ஓடி வந்து உதவி செய்தார்கள் என்று உருகினார் ஹன்ஷிகா.

கஷ்டமில்லாத வேலைன்னு எதுவுமே இங்க இல்லை. எல்லாமே கஷ்டம் தான். உரு படத்தைப் பொருத்தவரைக்கும் டைரக்டர் விக்கி ஆனந்த் இந்தக்கதையை என்கிட்ட முதல் முறையா சொல்றப்ப அவர் மேல பெரிய நம்பிக்கை இருந்துச்சு. அவர் கொண்டு வந்த டீமும் ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்தக் கதையை நம்பித்தான் உழைச்சிருக்கோம்.

நாங்களாவது கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போம். ஆனால் டெக்னீஷியன்ஸ் எல்லோரும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அவங்களுக்காகவே இந்தப்படம் கண்டிப்பா நல்லா ஓடணும்ங்கிற ஆசை இருக்கு.

கொடைக்கானல்ல அவ்ளோ குளிர்லேயும் கால் கையை நகர்த்த முடியாது. அதுவும் நைட் நேரத்துல ரொம்ப குளிரும். அதையெல்லாம் தாண்டி மொத்தப் படக்குழுவும் எனக்கு வெளியில் சொல்ல முடியாத உதவிகளைக் கூட செஞ்சாங்க. அவங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன் என்று உருகினார் தன்ஷிகா.

‘உரு’ என்றால் உருவம் என்கிற அர்த்தமும் வரும், அதேபோல பயம் என்கிற அர்த்தமும் உண்டு. அந்த வகையில இதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக எடுத்திருக்கிறேன். இந்த படத்தை முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது சவாலான விஷயமாக இருந்தது.

இந்த படத்தில் கலையரசன், தன்ஷிகா என படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போகும் விதமாக ‘உரு’ நல்ல ஒரு படமாக வந்துள்ளது’’ என்றார் இயக்குநர் விக்கி ஆனந்த்.

DhansikaJohan ShevaneshKalaiyarasanURUUru Movie Press Meet Stills
Comments (0)
Add Comment