பாலிவுட் வரை சென்ற நம்மூர் தனுஷ் இன்றைக்கு ஹாலிவுட்டும் அவரைத் தேடி வந்து நடிக்கக் கூப்பிடுகிற அளவுக்கு உலக அளவில் பிரபலமாகி விட்டார்.
ஆனால் எந்த உசரத்துக்கு போனாலும் அவரிடம் இருக்கின்ற எளிமையும், நட்பு பாராட்டுவது மட்டும் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதற்கு உதாரணம் தான் இந்தச் செய்தி!
பாலிவுட்டில் தான் தயாரித்து வரும் ‘நிம்மோ’ என்ற ஹிந்திப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க தனுஷை கூப்பிட்டாராம் ஆனந்த் எல்.ராய். தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்த தனுஷூக்கு ஆனந்த் எல்.ராய் அவர் கேரக்டருக்கான சம்பளப் பணத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் தனுஷோ அவர் கொடுத்த சம்பளத்தை வாங்கவில்லையாம். ”உங்கள் மீது இருக்கும் மரியாதைக்காகவும், அன்புக்காகவும், நட்புக்காகவும் தான் இந்தப் படத்தில் நடித்தேன். சம்பளத்தை எதிர்பார்த்து நடிக்கவில்லை” என்று சொன்னதோடு அவர் கொடுத்த சம்பளத்தையும் வாங்க மறுத்து விட்டாராம்.
நட்புக்கு மரியாதை கொடுக்கும் தனுஷின் அன்பைக் கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போய் விட்டார் ஆனந்த் எல்.ராய்.
பாலிவுட்டில் தனுஷின் எண்ட்ரிக்கு ‘ராஞ்ச்னா’ படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டதே ஆனந்த் எல். ராய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிக்கடன்!