நான் இருக்கேன் நண்பா..! : கார்த்திக் சுப்புராஜூக்கு தைரியம் சொன்ன தனுஷ்!

தோ ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கியவர், அதன் மூலம் தயாரிப்பாளர்களிடம் பல கசப்பான அனுபவங்களை பெற்றவர் போலவே தனது மூன்றாவது படம் ”இறைவி”யிலேயே தயாரிப்பாளர்களை கொஞ்சம் கடுமையாக சாடி விட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அந்தக் காட்சிகள் கொண்ட படத்தை எடுப்பதற்கும் இன்னொரு தயாரிப்பாளர் தான் அவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்தார் என்பது அவரே யோசிக்க வேண்டிய விஷயம்.

படம் வெளியாகி விஷயம் சீரியஸாகவும் பல தயாரிப்பாளர்கள் ”இறைவி” படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவருக்கு புதிய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் போர்க்கொடி தூக்கி படம் இயக்க தடை விதித்து விட்டார்கள்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் சங்கமும் மூக்கை நுழைத்திருப்பதால் சங்கத் தலைவர் விக்ரமன் ’’தயாரிப்பாளர் சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனை தீர்க்கப்படும்’’ என்றார்.

”இறைவி” விவகாரம் பூதாகரமான நிலையிலும் பீப் சாங் விவகாரத்தில் அனிருத்தை விலக்கி வைத்தது போல ”இறைவி” விவகாரத்திலும் கார்த்திக் சுப்புராஜை தனுஷ் விலக்கி வைத்து விட்டார் என்று செய்தி வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் என்கிற தகவலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த தனுஷ் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது அந்த செய்தி உண்மையில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இறைவி பஞ்சாயத்துக்கும், நான் அவரோடு சேர்ந்து படம் பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம்? அது வேறு, இது வேறு என்று கருத்து கூறிருக்கும் தனுஷ் எந்த காரணத்தை கொண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றுவது நிற்காது என்று கூறியிருக்கிறாராம்.

நன்பேண்டா..!

DhanushiraiviKarthik Subburajகார்த்திக் சுப்புராஜ்தனுஷ்
Comments (0)
Add Comment