தனுஷ் ராசி நேயர்களே படத்தின் பாடல்கள் குறித்து இயக்குநர் பேட்டி


கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் ஹரிஷ் கல்யான் நடித்துள்ள படம் தனுஷ் ராசி நேயர்களே. இப்படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் குறித்து இயக்குநர் சஞ்சய்பாரதி பேசியதாவது,

“நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன்.

இப்போது படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் மகத்தான வரவேற்பைப் பார்க்கும்போது எங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. ஜிப்ரானைப் பொறுத்தவரை, அவர் மிகச் சிறந்த இசையை தருவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தனித்துவம் மிக்க மிகச் சரியான குரலைத் தேர்வு செய்து பாட வைத்து பாடலை முழுமையுறச் செய்கிறார்.

இந்த வகையில் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ மேடம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் ஆல்பத்தின் வெற்றிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. பிரதான வேடங்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால் பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது” என்றார்.

Dhanusu Raasi Neyargalaegibranharishkalyan
Comments (0)
Add Comment