48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர்!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ட்ரைலர் உலக அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ட்ரைலர் வெளியாகி வெறும் 48 மணி நேரத்திற்குள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து, இந்த படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நிரூபித்துள்ளது.

இந்த ட்ரைலரின் மிரட்டலான பின்னணி இசையும், தெறிக்கவிடும் வசனங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இதன் ஆடியோ ட்ரெண்டாகி வருவதுடன், ஏராளமான ரீல்ஸ் மற்றும் ரசிகர்களின் எடிட் வீடியோக்களும் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், கூகுள் ட்ரெண்ட்ஸிலும் இந்த படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ட்ரைலர் வெளியான பிறகு, படத்தை பற்றியும், அதில் நடித்துள்ள நட்சத்திரங்கள் குறித்தும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது.

Dhurandhar movie