டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திரில்லர் படங்கள் மூலமாக கவனம் பெற்றவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அவர் தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒருசில காட்சிகள் மட்டும் ரஷ்யாவில் எடுக்க வேண்டிய இருக்கிறதாம்.
இப்போதுள்ள நிலையில் ரஷ்யாவிற்கு சென்று படம் எடுப்பதென்பது சாத்தியமில்லாத காரியம். அதனால் படத்தின் தயாரிப்புத் தரப்பில், “லாக்டவுன் முடிந்ததும் ரஷ்யாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை சென்னையிலே செட் போட்டு எடுக்கலாம்” என்றார்களாம். ஆனால் இயக்குநர் மறுத்துவிட்டாராம். அந்தக் காட்சிகள் ரஷ்யாவில் தான் படமாக்கப்பட வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருக்கிறாராம்.