சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து தான் ரஜினியும், கமலும் பெரிய நடிகர்கள் ஆனார்கள்! : இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

ன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ”சண்டிக்குதிரை” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ராஜ் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குநராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது….
சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள் . எது சின்ன படம்? எது பெரிய படம்? யார் நிர்ணயிப்பது? வெற்றியை வைத்து தான்.

கமல் நடித்த ‘அவர்கள்’ படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது தான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்று முடிச்சு’ படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது தான்.

நான் இயக்கிய முதல் படமான ‘புரியாத புதிர்’ முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், ‘சேரன் பாண்டியன்’ முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப்பட்டது.

படங்கள் வெற்றிபெறும் போது தான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள். இன்ட்ரஸ்டிங்கா எடுங்க அப்பத்தான் படமும் ஓடும் நீங்களும் ”பெரிய” என்கிற இடத்தை அடைய முடியும் என்று பேசினார்.

Director K.S.RavikumarSandikuthiraiSandiKuthirai Audio Launchகே.எஸ்.ரவிகுமார்சண்டிக்குதிரை
Comments (0)
Add Comment