ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 161 வது படத்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

அதற்கான முதற்கட்ட வேலைகளை தனுஷின் ஒண்டர்பார் நிறுவன முடுக்கி விட்ட நேரத்தில் கடந்த சில நாட்களாகவே படத்தின் கதையைப் பற்றி பரபரப்பு பற்றிக் கொண்டது.

ஆமாம், தலைவர் 161 வது படத்தில் ரஜினி ஒரு தாதாவாக நடிக்கப் போகிறார் என்றும், அது மும்பை தாதாவான ஹாஜி மஸ்தான் என்பவருடைய வாழ்க்கைக் கதை என்றும் செய்திகள் வெளியானது.

இந்தச் செய்தி வெளியான அதே சமயத்தில் ரஜினி ஹாஜி மஸ்தான் கேரக்டரில் நடிக்கக் கூடாது என்று அவருடைய வளர்ப்பு மகனான சுந்தர் சேகர் மிரட்டல் தொனியில் ரஜினிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு விளக்கம் தரும் விதமாக படத்தை தயாரிக்கும் ஒண்டர்பார் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில் ”எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக திரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.

குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல. இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை” என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Director RanjithHaji MastanPaRajinikanthRanjiRanjithThalaivar 161
Comments (0)
Add Comment