காதல் இந்த சமூகத்தை மாற்றியே தீரும்! : பா. ரஞ்சித் பரபரப்பு பேச்சு

ள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத ஒருசில தமிழ்த்திரைக்கலைஞர்களில் முக்கியமானவர் இயக்குநர் பா. ரஞ்சித்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலமாக ”கபாலி”யில் காட்ட நினைத்ததும், சமூகத்துக்கு சொல்ல நினைத்ததும் இதுதான் என்று மீடியாக்களிலும் அது சம்பந்தமான விவாதங்களிலும் தைரியமாக உண்மைகளைப் பேசினார். அப்படிப்பட்ட தைரியம் தான் இன்று ‘மாவீரன் கிட்டு’ படத்தின் ஆடியோ பங்ஷனிலும் அவருடைய பேச்சில் தெறித்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே இது எந்த மாதிரியான படம் என்கிற எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கிளப்பி விட்டிருந்தது.

விழாவில் ரஞ்சித் பேசியதாவது :

”பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கிறது, கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கிறது கிராமங்களில் வாழும் மக்கள், எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது. முதன் முதலாக வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்க கூடிய அரசியல்,அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிக சினிமாவில் காட்சிபடுத்தியிருந்தார் சுசீந்திரன்.

அதேபோல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது, யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது , அந்தக் கேள்விக்கு இந்தப்படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .

இந்தப் படத்தில் வரும் டிரெய்லரும், பாடல்களும் அதைத்தான் திருப்பி திருப்பி சொல்ல வருகிறது. இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது. “மாவீரன் கிட்டு” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டு பண்ணும் .”காதல்” இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கையை உண்டு.

அந்த வகையில் சுசீந்திரன், யுகபாரதி, இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மாதிரியான படங்கள் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும். தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன் வருவார்கள், தமிழ் ரசிகர்கள் எந்தப் படத்தையும் தரம் பிரித்து பார்ப்பதில்லை, இந்தப்படம் கமர்சியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

Director Pa RanjithMaaveeran KittuMaaveeran Kittu Audio Launch Vishnu VishalPa.ranjithSri Divya
Comments (0)
Add Comment