ஷங்கருக்கு வந்த ‘எந்திரன் – 2’ எரிச்சல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ‘எந்திரன்’ படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கத் தயாராகி வருகிறார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.

இதற்காக கதையை கடந்த 1 வருட காலமாக பட்டை தீட்டி வருகிறார். வழக்கமாக ஒரு படத்தின் திரைக்கதையை தயார் செய்து விட்டுத்தான் ஹீரோவை தேர்வு செய்வார் ஷங்கர். ஆனால் இந்தப் பாகத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ அமீர்கானை மனதில் வைத்து கதையில் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கினாராம்.

இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தி வந்த நிலையில், திடீரென்று அமீர்கான் தனது மேனேஜர் அத்வைத் சந்தன் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து விட்டார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஷங்கரோ செம அப்செட்!

எந்திரனின் முதல் பாகத்தில் ரஜினிக்கு முன்பு பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தினார் ஷங்கர். அவர் நடிக்க மறுத்ததால் ரஜினியை நடிக்க வைத்தார். இப்போது இரண்டாம் பாகத்திலும் இன்னொரு பாலிவுட் ஹீரோ அமீர்கான் ஏமாற்றியிருப்பது ஷங்கருக்கு ரொம்பவே எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

இப்போது அந்த கேரக்டரில் அமீர்கானுக்குப் பதில் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.

ஷங்கருக்கு பாலிவுட்டே செட்டாகாது போலிருக்கு..!!!

Aamir KhanDirector ShankarEndhiran-2
Comments (0)
Add Comment