பட்ஜெட்டில் பாதியை கேட்கும் அர்னால்ட்! : அதிர்ச்சியில் ஷங்கர்

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டப் படைப்பான எந்திரன் 2 படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

டிசம்பரில் கபாலி பீவர் முடியவும் அடுத்த வருட ஜனவரியின் எந்திரன்2 பீவர் தொடங்கி விடும்.

முந்தைய எந்திரன் படத்தை விட இந்த இரண்டாம் பாகத்தை 10 மடங்கு பிரம்மாண்டமாக காட்ட திட்டமிட்டு வரும் ஷங்கர் பாகுபலி படத்தை விட ரசிகர்கள் இந்தப்படத்தைப் பார்த்து பிரம்மிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து தொழில்நுட்பங்களுக்கு அதிக செலவு செய்ய யோசித்து வருகிறார்.

அதோடு படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கும் அவர் விரைவில் அவரை நேரில் சந்திக்க அமெரிக்க செல்ல இருக்கிறார்.

அதற்குள் அவருடைய சம்பள விபரங்களைக் கேட்ட ஷங்கர் ஷாக்காகியிருக்கிறார்.

ஆமாம், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதில் ஒன்றும் சங்கடமில்லை. ஆனால் முழுப்படத்திலும் நடித்து முடிக்க சம்பளம் மட்டுமே 100 கோடி வேண்டும் என்கிறாராம் அர்னால்ட்.

அதுபோக அவர் படப்பிடிப்புக்கு இந்தியா வந்தால் கூடவே ஒரு பெரிய பாதுகாப்பு கூட்டம் அவருடன் சேர்ந்து வரும் அவர்கள் அனைவரும் தங்குவதற்கு ஹோட்டல் ரூம், சாப்பாடு செலவு, இத்யாதிகள் என அதுவும் சில கோடிகளை எட்டும் என்பதால் அர்னால்ட்டை கமிட் செய்யலாமா வேண்டாம் என்று தயங்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.

ஒருவேளை கமிட் செய்தாலும் படத்தின் பாதி பட்ஜெட் அவருக்கே போய்விடும் மீதி பட்ஜெட்டில் எப்படி பாகுபலியை விட பிரம்மிக்க வைக்கும் படத்தை எடுப்பதும் என்கிற கவலையும் அவருக்கு வந்திருக்கிறது.

ஆக எந்திரன் 2 படத்தில் அர்னால்ட் இருப்பாரா? இல்லையா? படம் பற்றிய அறிவிப்பு வரும்போது தெரியும். அதுவரை அது ஒரு கிசுகிசுவாகவே இருக்கும் என்பது மட்டும் உண்மை.

Arnold SchwarzeneggerDirector ShankarEnthiran 2
Comments (0)
Add Comment