பிரபுதேவா – டைரக்டர் ஏ.எல். விஜய் : மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

ரு வெற்றி பெற்ற கூட்டணி மறுபடியும் இணைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால் மறுபடியும் சேர வேண்டும் என்பதற்காக மட்டுமில்லாமல் ஒரு நல்ல கதைக்காகவே மீண்டும் இணைந்திருக்கிறது இயக்குனர் ஏ.எல் விஜய்-பிரபுதேவா கூட்டணி.

‘தேவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி தற்பொழுது புதிதாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். டைட்டில் வைக்கப்படாத இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளுக்கு சாம் CS இசையமைக்கவுள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

ஹிந்தியில் ‘லவ் இன் டோக்யோ’, ‘ஜூகுனு’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹிந்தி சினிமா உலகின் ஜாம்பவான் ‘பிரமோத் பிலிம்ஸ்’ இப்படத்தை, சினிமா தயாரிப்பிலும் விநியோகத்தில் பல உயரங்களை தொட்டுள்ள ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவிச்சந்திரனுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

A. L. VijayDirector VijayPrabhu DevaPramod FilmsTrident Arts
Comments (0)
Add Comment