நயன்தாராவை கை கழுவும் சிவகார்த்திகேயன்!

‘வேலைக்காரன்’, ‘சீம ராஜா’ படங்களின் படுதோல்வியால் ரொம்பவே அப்செட்டில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

அடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால் சென்ற வாரம் ரிலீசான அந்தப்படம் முந்தைய இரண்டு படங்களை விட படு பயங்கர தோல்விப்படமாக அமைந்து விட்டது.

சொல்லப்போனால் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு ‘சீமராஜா’ படமே பெட்டர் என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

படத்தில் நான்கைந்து காமெடி நடிகர்கள் இருந்தும் மருந்துக்கு கூட சிரிப்பு இல்லை, வயது மூத்த நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு செட்டாகவில்லை ஆகியவை படத்தின் படுதோல்விக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டது.

இந்த இரண்டு காரணங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட சிவகார்த்திகேயன் இனி நடிக்கப் போகும் படங்களில் நயன் தாராவுடன் ஜோடி சேரப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

கடந்த சில வருடங்களாகவே இளம் நடிகர்கள் அத்தனை பேரும் நயன் தாராவுடன் ஜோடி சேர தவம் கிடந்தார்கள். அவருடைய கால்ஷீட் கிடைத்தாலே போதும், நான் நடிக்கத் தயார் என்று சொன்ன ஹீரோக்கள் கூட உண்டு. ஆனால் இப்போது சிவகார்த்திகேயனுக்கு வந்திருக்கும் மோசமான ரிசல்ட்டால் மற்ற இளம் ஹீரோக்களும் நயனுடன் ஜோடி சேர்வதை யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்போ இனிமே கோலமாவு கோகிலாவோட ஜோடி யோகிபாபுக்கள் தானா?

Movie Newsmr localNayantharasivakarthikeyan
Comments (0)
Add Comment