பன் பட்டர் ஜாம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் டிரோன்ஸ். ஜெயிலர் 2வோடு மோதவுள்ள இந்தப்படம் குறித்து படத்தின் நாயகி
சித்தி இத்னானி பேசியதாவது..,
“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் தமிழ்நாட்டைத் தாண்டி, நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. ‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவரும் தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைக் காணவும் ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்