தமிழ்சினிமாவில் இதோ இன்னொரு வாரிசு நடிகர் தயாராகி விட்டார்.
‘குணச்சித்திர கேரக்டரா..? கூப்பிடுங்க அவரை’ என்று யோசிக்கிற இயக்குநர்கள் கண்கள் முன்னால் வந்து நிற்பவர் டெல்லி கணேஷ்.
பல ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அவரது மகன் மஹா தான் ‘என்னுள் ஆயிரம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
எனக்கு ஒரே மகன் மஹா. அவன் நெறைய படிக்கணும்னு ஆசைப்பட்டேன். லண்டன் வரைக்கும் போய் படிக்க வெச்சேன். அவனும் என்னோட ஆசையை நிறைவேத்தினான். அப்புறம் என்ன
பண்ணப் போறேன்னு கேட்டப்பத்தான் அப்பா நானும் நடிக்கப் போறேன்னு சொன்னான்.
என்னோட ஆசையை அவன் நிறைவேத்தி வச்சான், அதேமாதிரி அவனோட ஆசையையும் நான் நிறைவேத்தி வைக்கணும். அதுதானே பிள்ளையைப் பெத்த ஒரு அப்பாவோட கடமை.
அதனால தான் ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்ங்கிற பேர்ல சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சு என் மகனை ஹீரோவா வெச்சு இந்தப்படத்தை தயாரிச்சிருக்கேன்.
இந்த பேனர்ல நான் ஆரம்பிச்ச நாடகக் கம்பெனியும் சக்சஸ்புல்லா போச்சு. நெறைய நாடகங்களை நாடுமுழுவதும் நடத்தி நெறைய பணம் சம்பாதிச்சேன். அதனால இந்த பெயரையே படத்தயாரிப்பு நிறுவனத்துக்கும் வச்சுட்டேன்.
என் மகன் ஹீரோவா நடிக்க தயாரா இருக்கான்னு தெரிஞ்சதும் நெறைய இயக்குநர்கள் வந்து என்னை அப்ரோச் பண்ணினாங்க. கதை சொன்னாங்க. ஆனா அதெல்லாம் என் மகனுக்குப் பிடிக்கல. அப்பத்தான் ஏ.எல்.விஜய்யோட உதவி இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை சொன்னார். அப்பா இதுதான் என்னோட எண்ட்ரிக்கு சரியான கதைன்னு மகன் சொன்னான்.
அதை எனக்குத் தெரிஞ்ச தயாரிப்பாளர்கிட்ட சொன்னப்ப அவங்க நெறைய மாற்றங்களை செய்யச் சொன்னாங்க, அது சரிப்பட்டு வராதுன்னுட்டு நானே என்கிட்ட இருக்கிற பணத்தை வெச்சு படத்தை தயாரிச்சிட்டேன். என்னோட மகன் என் தயாரிப்பிலேயே அறிமுகமாகிறது எனக்குப் பெருமை தானே… என்றார் டெல்லி கணேஷ்.
படத்தில் மஹாவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் கேரள வரவு மரீனா. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளிச்சு ஜெயிக்கிறான்ங்கிறது தான் என்னுள் ஆயிரம் படத்தோட ஸ்பெஷல் டிரீட்மெண்ட்டாம்!