பவர்புல்லான போலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ”இ.பி.கோ 302”

துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டரில் ”இ.பி.கோ 302” என்ற படத்தில் நடிக்கிறார் கஸ்தூரி.

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படிப்பட்ட கதாபாத்திரம் கஸ்தூரிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் பேசியபோது… ”கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. கொலை செய்யப்பட்டவர் யார் என்றும் தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை.

காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள் வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.

இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி.

ரொம்பவும் பவர்புல்லான அந்த கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார் கஸ்தூரி. படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்த படம் நடந்து கொண்டிருக்கும் போதே புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து “எதிர்வினை” என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களும் நிறைவான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது” என்றார் இயக்குனர் சலங்கைதுரை.

EPCO 302KasthuriMovie News
Comments (0)
Add Comment