எக்ஸாம்- விமர்சனம்

TNPC-யில் நடந்த/நடக்கும்? எக்ஸாம் குளறுபடிகளை வைத்து ஒரு கதை பின்னியுள்ளார் இயக்குநர் சற்குணம்

இந்த வெப்சீரிஸின் கதை நாயகியான துஷாரா விஜயன் ஆள்மாறாட்டம் செய்து டி.எஸ்.பி ஆகிறார். (இன்றைய சோசியல் மீடியா காலத்தில் இப்படி ஈசியாக ஆள்மாறாட்டம் செய்ய முடியுமா?) அதீதிபாலன் தான் ஒரிஜினல் டி.எஸ்.பி. அவரை அபேஸ் பண்ணித்தான் இந்த ஆள்மாறாட்டத்தை நிகழ்த்துகிறார் துஷாரா விஜயன். இவரை இயக்கும் சக்தியாக இருக்கிறார் அப்பாஸ்! ஒரு டி.எஸ்.பி ஆக மாறி துஷாரா சாதிக்க நினைத்தது என்ன? என்பதற்கான விடையை ஏழு எபிசோட்களாக விரித்து வளர்த்துச் சொல்கிறார்கள்

துஷாரா விஜயன் ப்ளாஸ்பேக்கில் வரும் அப்பாவி பெண்ணாக கலங்கடிக்கிறார். ஆனால் டி.எஸ்.பி வேடம் அவருக்கு ‘குருவி தலையில் பனங்காய்’ என்ற ரேஞ்சில்தான் உள்ளது. அப்பாஸ் ஒரு பாசிட்டிவான ரோலில் மிக பாசிட்டிவாக நடித்துள்ளார். இனி அவரை இப்படியான கேரக்டர்களில் நிறையப் பார்க்கலாம். அதீதிபாலனை இன்னும் பெட்டராக யூஸ் பண்ணியிருக்கலாம். ஆனால் நடித்த வரைக்கும் ஒகே

சீரிஸின் கலரை கதைக்கேற்றவாரு மாற்றி ஒளிப்பதிவில் மாயாஜாலம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்தமுறை இரைச்சல் குறைவான இசையைத் தந்துள்ளார். சிறப்பு

நல்ல கதையை கையெடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம். இது ஒரு சினிமாவுக்கான கதை என்றளவிலே தேங்கிவிடுவது பெரிய மைனஸ்! வெப்சீரிஸாக ஏழு எபிசோடுகளாக இழுத்துச்செல்ல திரைக்கதையில் சரக்கில்லை என்பதே உண்மை.. மேலும் லாஜிக் கேள்விகள் கிலோ கணக்கில் இருக்கிறது. இன்னும் நிறைய கிளைக்கதைகள் கேரக்டர்களை துணைக்குச் சேர்த்திருந்தால் எக்ஸாம் இப்படி பலவீனமாக இருந்திருக்காது
2.75/5

Atheethi Balandirector CharkunamExam webseries