ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி ( (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ திரைப்படம் – எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் பிரபாஸை இதுவரை காணாத ஒரு புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஃபௌஜி’ திரைப்படம் – பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெளியீட்டு தேதி அறிவிப்புடன் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ‘ஃபௌஜி’ திரைப்படத்தின் தீவிரமான தன்மையையும்… அதன் பிரம்மாண்டமான அளவையும்… உணர்வுபூர்வமான ஆழத்தையும்… வெளிப்படுத்துகிறது. இதில் பிரபாஸ் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கரடு முரடான தோற்றத்தில் உணர்ச்சிகரமாக காட்சியளிக்கிறார்.