‘வட சென்னை’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் இடம்பெற்ற அமீர் – ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும், அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தற்போது சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதில் அமீர் – ஆண்ட்ரியா இணைந்து நடித்த வேறு இரண்டு காட்சிகளை படத்தில் இணைத்துள்ளனர்.

அதே போல படத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில ஆபாச வார்த்தைகள் கொண்ட காட்சிகளுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ameerAndrea JeremiahDhanushvada chennai
Comments (0)
Add Comment