‘டார்லிங்’ படத்தில் அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அடுத்து வந்த ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ பெரிய அளவில் இளவட்ட ரசிகர்களை பெற்றுத் தந்திருக்கிறது.
பிட்டு பட ரேஞ்சில் இருந்த அந்தப்படம் வசூலை ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தாலும் சொந்த வீட்டிலேயே ஜி.வியை எல்லோரும் திட்டித்தீர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதோடு முடிந்ததா பிரச்சனை என்றால் அதுதான் இல்லை.
தற்போது ஜி.வியைத் தேடி வரும் கதைகளும் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ரேஞ்சிலேயே வெர்ஜின் ஐட்டங்களாக இருக்கிறதாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜி.வி. இனிமே அந்த மாதிரியான படங்களை புறக்கணித்து விட்டு நல்ல கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
‘கெட்ட பையன்டா கார்த்தி’, ‘புரூஸ் லீ’ ஆகிய படங்கள் ரிலீசானதும் ‘டேவிட் புள்ள’ என்கிற கெட்ட பெயர் ஜி.வியை விட்டுப் போய் விடுமாம்.
சூப்பர் ஜி… சூப்பர் ஜி…