இந்த புயலால் பல கிராமங்களில் உள்ள மக்கள் அடிப்படி தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் உதவி செய்து வருகின்றனர். அதேபோல ரஜினி ரசிகர்களும் தங்கள் சார்பில் பொது மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்களின் இந்த உதவி தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கு காரணம் ரஜினி ரசிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கும் உணவு பண்டங்களில் ரஜினி படம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 2016- ல் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படும் உதவிப் பொருட்களில் ஆளும் அதிமுக கட்சியினர் ஜெயலலிதாவின் புகைப்பட ஸ்டிக்கரை ஒட்டிக் கொடுத்தது பெரும் சர்ச்சையையும், பொதுமக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இன்னும் ஆட்சிக்கே வராத ரஜினியைச் சார்ந்திருக்கும் அவருடைய ரசிகர்கள் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது அரசியல்வாதிகளையே நீங்க மிஞ்சிட்டீங்கப்பா என்று சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல் செய்கிற அளவுக்குப் போயிருக்கிறது.
உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் போல?