கிராமத்து பெண்களுடன் உலக மகளிர் தினத்தை கொண்டாடிய நடிகை கௌதமி!

மார்ச் 8 சர்வதே மகளின் தினத்தை கிராமத்துப் பெண்களுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார் நடிகை கெளதமி.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ”தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, நண்பியாகவோ, தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் செய்பவள் தான் பெண்.

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய போர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற இடங்களின் உள்ள பெண்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடினேன். அந்த அழகான ஹீரோக்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடியது எனக்கு பெருமையளிக்கிறது. தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி” என்றார்.

GautamiWomens Day
Comments (0)
Add Comment