என்னை டார்ச்சர் செய்யாத ஒரே ஹீரோ சிம்பு தான்! : கெளதம்மேனன் குட் சர்ட்டிபிகேட்

60 நாட்கள் படப்பிடிப்பு ப்ளான் செய்யப்பட்ட படம் தான் கெளதம் மேனனின் ”அச்சம் என்பது மடமையடா” கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ரிலீசுக்குத் தயாராகியிருக்கிறது.

சிம்பு, மஞ்சிமா மோகன், கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என பெரிய டீம் இருந்தும் இந்தத் தாமதம் ஏன்?

இந்தக் கேள்வி வரும் என்று தெரிந்தே வந்ததாலோ என்னவோ நின்று நிதானமாக பதிலளித்தார் இயக்குநர் கெளதம்மேனன்

உண்மையிலேயே இந்தப்படம் தாமதமானதுக்கு என்ன காரணம்னு தெரியல… இந்தப்படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஒரு தெலுங்கு படத்தையும் ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல எங்களுக்கு பைனான்ஸ் கெடைக்கல. உடனே தெலுங்கு படத்துக்கு வந்த பணத்தை வெச்சு தமிழ்ப்படத்தை பண்ணினோம். மொத்தமா 60 நாட்கள் தான் இந்தப் படத்தோட படப்பிடிப்பு நாட்கள். ஆனா ரெண்டு மொழியிலேயும் சேர்த்து ஒன்றரை வருஷன் ஆயிடுச்சு. சத்தியமா இந்தப்படம் யாரால, எதனால தாமதமாச்சுன்னு எனக்கு தெரியவே இல்லை. அதுக்காக சிவகார்த்திகேயன் மாதிரி என்னால அழ முடியாது.

12 மணிக்கு ஷூட்டிங்னா 2 மணிக்குத்தான் சிம்பு ஸ்பாட்டுக்கு வருவார். ஆனா வந்த வேகத்துல பிரமாதமா வேலைகளை முடிச்சுக் கொடுப்பார். மத்த ஹீரோக்கள் மாதிரி சிம்பு என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். அவர்கூட வேலை செய்யிறப்போ எனக்கு ஒரு கம்போர்ட் லெவல் இருக்கு.

இந்தப்படம் இவ்வளவு தாமதமாகியும் பார்க்கிறதுக்கு எல்லோரும் ஆவலா இருக்காங்கன்னா அதுக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட இசை தான். அவரோட இசையினால தான் இந்தப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கெடைச்சிருக்கு. எப்பவுமே நான் அவரை அவசரப்படுத்தினது கெடையாது. அவரே போன் பண்ணுவார். போய் உட்காருவேன். சூப்பரா சாங்க் போட்டுத் தருவார் என்றார்.

சரி மறுபடியும் சிம்புவை வெச்சுப் படம் பண்ணுவீங்களா..? என்கிற கேள்விக்கு பதிலளித்த கெளதம் கண்டிப்பா பண்ணுவேன். அது என்னோட சொந்த பேனர்ல தான் பண்ணுவேன். மத்த கம்பெனியில பண்ண மாட்டேன் என்றார்.

முன்னதாக படத்தின் விளம்பரங்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இல்லாதது குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பிய போது ”யாரு எப்போ கேஸ் போடுவாங்கன்னே தெரியாது. அதனால தான் தான் கம்பெனி பேர் போடவில்லை.” என்றார் கெளதம்.

ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்றத்துக்குள்ள எவ்வளவு சங்கடம்….!!!

Achcham Yenbadhu MadamaiyadaAYKGautham MenonSimbu
Comments (0)
Add Comment