‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.
சிவகார்த்திகேயன் ஹீரோ என்பதால் அவருக்கு இருந்த மாஸை வைத்து அந்தப்படம் ஓரளவுக்கு வசூலில் தப்பித்தது.
அதில் டெக்னிக்கலாக திருக்குமரன் மிரட்டியிருந்ததால் உதயநிதிக்கு தனது உதவியாளரின் ‘கெத்து’ கதையை ரெகமெண்ட் செய்ததே ஏ.ஆர்.முருகதாஸ் தானாம்.
மிகுந்த எதிர்பார்ப்போடு பொங்கலுக்கு ரிலீசான இந்தப்படத்தைப் பற்றி விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எதிர்மறை விமர்சனங்களால் அப்செட்டாகியிருக்கும் உதயநிதி ”நான் ரசிகர்களுக்காகத்தான் படமெடுக்கிறேன். விமர்சகர்களுக்காக படமெடுக்கவில்லை” என்று காட்டமாக புலம்பியிருக்கிறார்.
விமர்சகர்களும் ரசிகர்களின் மனநிலையில் தான் விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் என்கிற உண்மை உதயநிதிக்கு தெரியாதா என்ன..?