எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘கோட்’ பட டிரைலர்!

ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் ‘கோட்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான ‘கோட்’ மீதான எதிர்பார்ப்பை பரபரப்பு காட்சிகளுடன் கூடிய டிரைலர் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘கோட்’, தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். அதிரடி ஆக்ஷன் படமான இதில் தளபதி விஜய் உடன் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா முதல்முறையாக நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது இன்னும் அதிகரித்துள்ளது.

பிரபல நட்சத்திரங்களான மோகன், அஜ்மல் அமீர், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், வி டி வி கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Actor VijayDirector Venkat Prabhugoat movie