மக்களுக்கு உதவ வரும் ‘ஜிஎஸ்டி வண்டி’… – கோலிசோடா 2 படக்குழுவினரின் வித்தியாசமான விளம்பர முயற்சி!

2014-ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கோலி சோடா’.

தற்போது, அதன் இரண்டாம் பாகத்தை கோலிசோடா 2 என்று டைட்டில் வைத்து விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார்.

இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்திலும், இயக்குநர் கெளதம் மேனன் போலீஸாகவும் நடித்துள்ள இப்படத்தில் ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

முதல் பாகம் தங்களுக்கென ஒரு முகவரி தேடும் சிறுவர்களின் கதை என்றால், இரண்டாம் பாகத்தில் தங்களுக்கென கிடைத்த முகவரியை தக்க வைத்துக் கொள்ள இளைஞர்கள் சிலர் நடத்தும் போராட்டமே கதைக்களமாம்.

சென்சாரில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் ஜூன் 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், கோலிசோடா 2வை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ‘ஜிஎஸ்டி’ என்ற வண்டியை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வண்டியில் மக்களுக்கு பயன்படும் வகையில் உணவுகள், மோர், இளநீர், தண்ணீர் பாட்டில்கள், சத்து மாவு பாக்கெட்டுகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும்.

அவை வண்டி செல்கிற வழியில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும். இந்த உதவிகள் செய்யும் வண்டி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வர இருக்கிறது.

வழக்கம் போல, படத்தின் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு மாற்றாக, வித்தியாசமாக நேரடியாகவே மக்களை சென்றடையும் வகையில் இந்த வண்டி வலம் வர இருக்கிறது.

அப்படி வருகிற போது எங்கள் வண்டியில் ஒட்டப்பட்டிருக்கும் கோலிசோடா 2 விளம்பரமும் மக்கள் மத்தியில் போய்ச்சேரும். அந்த வகையில் இதில் பொதுநலத்துடன் எங்கள் சுயநலமும் கலந்துள்ளது என்கிறது படக்குழு.

இதுபோன்ற சின்னச் சின்னத் தேவைகள் ஏதேனும் தேவைப்பட்டால் அது குறித்தும் தெரிவிக்கலாம். அந்த உதவிகளையும் எங்களால் முடிந்த அளவு செய்வோம் என்கிறார் விஜய் மில்டன்.

இது தொடர்பாக விஜய் மில்டன் வெளியிட்டிருக்கும் வீடியோ இதோ :

Goli Soda 2gst vandiVijay Milton
Comments (0)
Add Comment