அந்த வரிசையில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்துக்கு ‘பேச்சுலர்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லி பாபு தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சசியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.
சமீபத்தில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 30 ம் தேதி சென்னையில் துவங்கியிருக்கிறது.
படத்தின் முக்கியமான காட்சிகளை இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் படமாக்கிவிட்டு, மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர இருக்கிறது படக்குழு. இந்தப் படத்துக்காக நடிக்கும் போது திரும்ப திரும்ப பல டேக்குகளை கேட்டு வாங்கி நடித்தாராம் ஜி.வி.பிரகாஷ்.
நாயகியாக திவ்ய பாரதி நடிக்கிறார். யூடியூப் நக்கலைட்ஸ் மூலம் பிரபலமான அருண்குமார் உட்பட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.