அயோத்தி ராமர் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கும் ‘ஹனு-மான்’ படக் குழு!

‘ஹனு-மான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து.. அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை.. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்’ என அப்படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பிற்கு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரவேற்பும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘ஹனு-மான்’ வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இந்நிலையில் படக் குழு தற்போது கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதில் ஒரு நிகழ்வாக ஹைதராபாத்தில் ஃபிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Actor Teja SajjaActress varalaxmisarathkumardirector Prasanth VarmaHanuMan movie