பயப்படாதீங்க… கண்டிப்பா ஹீரோ ஆக மாட்டேன் – டி.இமான் திட்டவட்டம்

‘தமிழன்’ படத்தில் ஆரம்பித்து விரைவில் ரிலீசாகப் போகும் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படம் வரை 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.

அந்த சந்தோஷ செய்தியை சமீபத்தில் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டவர் தனது வளர்ச்சியில் துணை நின்ற அத்தனை பேருடைய பெயர்களையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்து மறக்காமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் ”உடம்பை குறைச்சிட்டு வந்ததுனால நான் ஹீரோவாக நடிக்கப் போறேன்னு யாரும் நெனைக்க வேண்டாம், கண்டிப்பா அப்படி ஒரு தப்பான முடிவை எடுத்து உங்க எல்லாரையும் சங்கடப்படுத்த மாட்டேன். நான் இசையமைப்பாளர் என்று சொல்லித்தான் என் மனைவியை திருமணம் செய்தேன். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹீரோவாக நாயகிகளுடன் டூயட் பாடி, அது வீட்டில் பஞ்சாயத்தாகி என் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள மாட்டேன்.

எனக்குப் பிடிச்சது இசைத்துறை தான். அதில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். காலத்தால் அழியாத 100 பாடல்களை எனது இசையமைப்பில் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு. அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்றவர் நான் இதுவரை 120 புதிய பின்னணிப் பாடகர்களை எனது இசையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள் தான். என்றார் முத்தாய்ப்பாக…

கிரேட் நண்பா..!

d imman press meetD. Imman
Comments (0)
Add Comment