இதுக்கெல்லாம் அசர்ற ஆளா சிம்பு…? : ஹையோ… ஹையோ…

‘இது நம்ம ஆளு’ படத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முழுதாக முடிந்து விட்டது. ஆனால் இன்னும் படம் முடிந்தபாடில்லை.

இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கும் படத்துக்கு அதிகபட்சம் 3 மாசம் தான் டைம் எடுப்பார். இப்போதோ சிம்புவை வைத்து படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

பாண்டிராஜின் புலம்பலைப் பற்றி சிம்புவும் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. பாண்டிராஜும் புலம்புவதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

அடிக்கடி இது நம்ம ஆளு சம்பந்தமாக தனது எரிச்சலை அப்பட்டமாகத் தெரிவிக்கும் அவர் இப்போதும் சிம்புவை கலாய்த்திருக்கிறார்.

‘எல்லா படமும் நல்ல படமா வரணும்னு தான் இரவு பகலா உழைக்கிறோம், சில படங்கள் நல்ல படமா அமையுது, சிலது ஏடா கூடமா அமையுது. எதுவுமே நமக்கு நல்லதா அமையணும்’ என்று இது நம்ம ஆளுவைப் பற்றி புலம்பித் தள்ளியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இதுக்கெல்லாம் அசர்ற ஆளா சிம்பு…? ஹையோ… ஹையோ…

Director PondirajIdhu Namma AaluNayantharaSimbu
Comments (0)
Add Comment