‘இது நம்ம ஆளு’ பொங்கலுக்கு வருதாம்! : சிம்பு சொல்றார்… நம்பி வைப்போம்…

ரமணன் சொல்லும் வானிலை அறிக்கை போல ஆகி விட்டது சிம்பு நடிக்கின்ற படங்களின் ரிலீஸ்!

வரக்கூடும், எதிர்பார்க்கப்படுகிறது போன்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

அப்படி ஒரு சூழல் தான் நேற்றுவரை ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு ஏற்பட்டிருந்தது. எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தை குறுகிய காலத்தில் படமெடுத்து பேர் வாங்கிய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார்.

அவரே நொந்து நூடுல்ஸ் ஆகிப்போகிற அளவுக்கு கொடுத்த சிம்பு ஃபேமிலி கொடுத்த டார்ச்சர்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அப்படியிருந்தும் அதையெல்லாம் சகித்துக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்தார்.

சரி இனிமேலாவது படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இழுவை சிம்புவின் தம்பி குறளரசன் மூலம் ஆரம்பமானது.

அவர் தான் படத்துக்கு இசையமைப்பாளர். பாடல்களை போட்டுக் கொடுக்கச் சொன்னால் பல மாதங்கள் இழுத்தடித்து அதுவும் பஞ்சாயத்தில் வந்து நின்றது.

அதையும் பேசி முடித்து இப்போது ஒருவழியாக படம் ரிலீசுக்குத் தயாராகி விட்டதாம்.

சில தினங்களுக்கு முன்பு சிம்பு தரப்பிலேயே ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீஸ் சம்பந்தமாக ஒரு செய்தி பகிரப்பட்டது.

அதில் வரும் டிசம்பரில் ஆடியோ ரிலீசாகும். படம் பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்புவே சொல்றார்… நம்பி வைப்போம்…

Idhu Namma AaluNayantharaSimbu
Comments (0)
Add Comment