‘பீப் சாங்’ விவகாரத்தை மீடியாக்கள் ஊதி ஊதி பெருசாக்குனதுனால எனக்கு 5 கோடி ரூபாய்க்கு ப்ரீயா பப்ளிசிட்டி கெடைச்சிருக்கு என்று சந்தோஷப்பட்டாராம் நடிகர் சிம்பு. அந்த சந்தோஷம் ரிலீஸில் இல்லை என்பதே லேட்டஸ்ட்டாக வரும் தகவல்.
படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் ரிலீஸ் தள்ளிப்போன ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோவை சமீபத்தில் தான் ரிலீஸ் செய்தார்கள்.
படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதால் ரிலீசில் எந்த சிக்கலும் இல்லை என்றே நம்பினார் டி.ஆர்.
ஆனால் ‘பீப் சாங்’ சர்ச்சையின் சூடு இன்னும் குறையாமல் அவ்வப்போது அது சம்பந்தமான கோர்ட், கேஸ் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நேரத்தில் படம் ரிலீசானால் எங்கே தியேட்டர்களை மகளிர் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்களோ? என்று தியேட்டர் உரிமையாளர்கள் அஞ்சுவதால் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏற்கனவே பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட நிலையில் திடீரென்று ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தள்ளி வைப்பு மாதக்கணக்கிலா? அல்லது ஆண்டுக்கணக்கிலா? என்பது தான் தெரியவில்லை.
படத்தின் வியாபாரத்துக்காக ஒரே ஒரு ‘குத்து சாங்’ எடுக்க நினைத்த டி.ஆர் நயன்தாராவிடம் அதற்காக கால்ஷூட் கேட்டு வந்தார். அவரோ கொடுத்த தேதிகளை வீணடித்து விட்டதால் மீண்டும் கொடுக்க மறுத்து விட்டார்.
இப்போ அந்த குத்து சாங்கே இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்ய தயார் என்றாலும் இந்த ‘பீப் சாங்’ குறுக்க வந்து நிக்குதே? என்பது தான் டி.ஆரின் கவலையாம்!