சிம்பு படமாச்சே…? : இதெல்லாம் இல்லேன்னா தான் ஆச்சரியப்படணும்

மீபத்தில் ரிலீசான ‘வாலு’ வரை சிம்புவின் படங்கள் ரிலீஸ் நேர சிக்கலைச் சந்தித்தபோதெல்லாம் கை தூக்கி விட்டுக் கொண்டிருப்பவர் அவருடைய அப்பா டி.ஆர்.தான்.

தன்னை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களே இல்லாத நிலையில் சொந்தமாக ‘இது நம்ம ஆளு’ படத்தை தயாரித்தார் சிம்பு.

படத்தை ஆரம்பித்து முடிப்பதற்குள் பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி போல பல வலிகளை சந்தித்து விட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.

பல தடவை நடந்த பஞ்சாயத்துகளில் சிம்பு – பாண்டிராஜ் இடையே நடந்த சண்டைகள் பேசித் தீர்க்கப்பட்டு ஒருவழியாக படம் வரும் பொங்கலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது.

அதே நாளில் தான் விஷாலை வைத்து பாண்டிராஜ் இயக்கிய ‘கதகளி’ படமும் வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் நடிகர் சங்கத் தேர்தலில் தான் சார்ந்த அணி தோல்வியடைந்ததால் விரக்தியில் இருந்த சிம்பு விஷால் படத்தோடு தனது படத்தை மோதவிட்டு யாருக்கு ரசிகர் பலம் அதிகம் என்பதைக் காட்ட திட்டமிருந்தார்.

சிம்புவுக்கு இப்போது அதிலும் கூட தோல்வியே கிடைத்திருக்கிறது.

‘வாலு’ படத்தின் ரிலீசின் போது நாலா பக்கங்களில் இருந்தும் குடைச்சல்கள் வந்தது போல எங்கே ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் கிளம்பி வந்து விடுவார்களோ? என்று பயந்த டி.ஆர். படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டாராம்.

அவர்களோ நினைத்த நேரத்தில் எல்லாம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. நேரம், காலம் பார்த்து தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொல்லி ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.

ஆக பொங்கலுக்கு வருவதாக உறுதியாகச் சொல்லப்பட்ட ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. அதுவும் கூட பிப்ரவரி மாதம் வந்தால் தான் தெரியும்.

சிம்பு படமாச்சே…? : இதெல்லாம் இல்லேன்னா தான் ஆச்சரியப்படணும்!

Idhu Namma AaluNayantharaSimbu
Comments (0)
Add Comment