சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டிய முதல்வர் மற்றும் கமல்!

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ‘ஜெய்பீம்’ குறித்து தனது சுட்டுரையில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு.நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என பதிவிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ‘ஜெய்பீம்’ குறித்து தனது சுட்டுரையில்,ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என பதிவிட்டிருக்கிறார்.

2D EntertainmentActor Prakash RajActor SuriyaActress Lijomol Josedirector GnanavelJaiBhim movie