ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஸ்ரீதேவியின் மூத்த மகளை சினிமாவில் நடிக்க வைக்க பல முன்னணி இயக்குநர்களும் ஸ்ரீதேவியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தமிழில் கூட விஜய்காந்த்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக கேட்டுப்போன அதிர்ச்சிகரமான சம்பவமெல்லாம் நடந்தது.
ஆனால் ஸ்ரீதேவியோ இன்னும் என் மகளின் படிப்பு முடியவில்லை. அதோடு வயசுக்குரிய பக்குவமும் வரவில்லை என்று தேடி வந்த எல்லா முன்னணிகளிடமும் நைசாக சொல்லி அனுப்பி விட்டார்.
அதன்பிறகு அவரது மகளைப் பற்றி எந்த வித செய்தியும் வராத நிலையில் இப்போது மீண்டும் ஜான்வி நடிக்கத் தயாராகி வருவதாக செய்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது.
மகளுக்கு சினிமாவே சிறந்தது என்பதை உணர்ந்த ஸ்ரீதேவி அவரை நடிப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்லில் லீ ஸ்டிராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பள்ளியில் நடிப்புப் பயிற்சிக்காக அனுப்பியிருக்கிறார்.
அங்கு நடிப்பு சம்பந்தமான எல்லா பயிற்சிகளையும் கற்று வரும் ஜான்வி விரைவில் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரின் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறாராம் ஸ்ரீதேவி.