சைலண்ட் ஆக ஜோக்கரை தயார் செய்த ராஜூ முருகன்..!

குக்கூ என்கிற தனது முதல் படத்தின் மூலமே யாரிவர் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜூ முருகன். கண்பார்வையற்ற காதலர்களின் புதிய உலகம் ஒன்றை நெகிழ்ச்சியாக காட்டிய ராஜூ முருகன் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் மௌனம் காத்துக்கொண்டு இருந்தார்..

ஆனால் திடீரென இப்போது அவர் ‘ஜோக்கர்’ என்கிற படத்தை இயக்கிவருவதாகவும் கிட்டத்தட்ட அதன் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த சோமசுந்தரம் என்பவர் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

குக்கூஜோக்கர்ராஜூ முருகன்
Comments (0)
Add Comment