சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத ரேவதி இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு இணையான கேரக்டரில் நடிக்கிறார்.
இவர்களோடு படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும் என்று நம்பலாம்.