”நான் எப்பவுமே ஓவரா நடிப்பேன்” – உண்மையை ஒப்புக்கொண்ட ஜோதிகா!

குடும்பத் தலைவியாகவும், ரேடியோ தொகுப்பாளராகவும் வித்யாபாலன் நடிப்பில் 2017-லில் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘துமாரி சுலு’.

இந்தப் படத்தை தற்போது தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.

இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் சிம்பு, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளார்.

நவம்பர் 16-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி பேசிய ஜோதிகா மாதவன், அஜீத்துக்குப் பிறகு நான் விதார்த்துடன் தான் சகஜமாக நடித்தேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ”ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். நான் அந்த இந்திப் படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

கமல் நடிக்கும் போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்து விடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். என்னால எம்.எஸ்.பாஸ்கர் மாதிரி அளவா நடிக்க முடியாது. நான் எப்பவுமே ஓவரா நடிப்பேன்.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் சேர்ந்து நடித்த ஹீரோக்களிலேயே சூர்யா, அஜித், மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.

முன்ன மாதிரி இல்லை, எனக்கு இப்போது வயதாகி விட்டது. அதனால் டான்ஸ் ஆடுவது கூட எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது” என்றார் சிரித்துக் கொண்டே…

ஒரு காலத்துல பூவ பூவ பூவ பூவே…ன்னு முயல்குட்டி போல துள்ளி ஆடிய கியூட் ஜோதிகாவா இப்படிச் சொல்றது?

JyothikaKaatrin MozhiPress MeetVidaarth
Comments (0)
Add Comment