நீர் வீழ்ச்சியில் இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்ப்பட ஹீரோ மரணம்! : மலேசியாவில் நடந்த சோகம்!

‘க க க போ’ படத்தின் கதாநாயகன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர் விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

‘க க க போ’ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இப்படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

​படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதன் ஒளிபரப்பை தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே மலேசியா சென்றார். அடுத்த வாரம் இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற இருந்த நிலையில் இந்த சோகம் நடந்திருக்கிறது குறிப்பிடக்தக்கது.​

ka ka ka poka ka ka po hero died
Comments (0)
Add Comment