‘காலா’ தலைவா படத்தின் காப்பியா? – இதென்ன புதுப்பஞ்சாயத்து?

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ திரைப்படம் வருகிற ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரிலீசாகும் படமென்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.

ட்ரெய்லரை இதுவரை சுமார் 2 மில்லியன் பேர் வரை பார்த்துள்ளனர். ட்ரெய்லரை பார்த்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும், படத்தில் சில காட்சிகளில் வரும் விஜய் ரெபரென்ஸ் விஜய் ரசிகர்களை சர்ப்ரைஸ் ஆக்கியுள்ளது.

காலா (ரஜினியின்) மனைவி ஈஸ்வரி ட்ரெய்லரில் வரும் ஒரு சீனில் பின்னணியில் உள்ள சுவரில் பைரவா பட விஜய் புகைப்படம் இருக்கும்.

இது ஒருபுறமிருக்க, மும்பை பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் காலா படத்தின் கதை கிட்டத்தட்ட விஜய் நடித்த தலைவா பட கதையைப் போலவே இருக்கிறது என்று ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள்.

ரசிகர்களின் சந்தேகம் எந்தளவுக்கு உண்மை என்பதை இன்னும் ஒரு வாரம் காத்திருந்தால் தெரிந்து விடப்போகிறது.

kaalakaala releaseThalaivaaThalapathyThalapathy Vijayvijay
Comments (0)
Add Comment