ராணா – துல்கர் சல்மான் இணையும் புதிய படம்!

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.  பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தை இணைந்து தயாரிப்பதுடன் துல்கர் சல்மான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்களை பின்னர் அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Actor DulquerSalmaanActor Rana Daggubatidirector SelvamaniSelvarajKaantha movie