ரஜினி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது : விருது விழாவில் நெகிழ்ந்த ராதிகா ஆப்தே!

‘கபாலி’ திரைப்படம் யாருக்கு விசேஷமோ இல்லையோ அப்படத்தின் நாயகி ராதிகா ஆப்தேவுக்கு ரொம்பவே விசேஷம் தான்.

ஏற்கனவே பிரகாஷ்ராஜின் ‘தோனி’ உட்பட சில படங்களில் நடித்தும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் ஹிந்திப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவரை இயக்குநர் ரஞ்சித் தேடிப்போய் கபாலிக்காக கமிட் செய்து விட்டு வந்தார்.

‘கபாலி’யின் நாயகி என்று செய்தி பரவ ஆரம்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங் ஹீரோயின் ஆகி விட்டார். முன்பை விட ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் அவருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்திருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் ரஜினிகாந்த் தான் என்பதை புரிந்து கொண்ட ராதிகா ஆப்தே சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த சைமா திரைப்பட விருது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்.

விழாவில் பேசிய அவர் ”ரஜினிகாந்த்தின் எளிமை, தன்னடக்கம் மற்றும் கடும் உழைப்பு ஆகியவை தான் எனக்கு அவரிடத்தில் மிகவும் பிடித்தது. மேலும் அவர் ஒரு சிறந்த மனிதர் . ரஜினிகாந்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று கூறினாராம்.

KabaliRadhika ApteRajinikanthகபாலிரஜினிகாந்த்ராதிகா ஆப்தே
Comments (0)
Add Comment