நெருப்புடா…. : சுல்தான் வசூலுக்கு சவால் விடும் ‘கபாலி’ !!

துவரை ரிலீசான எந்த ரஜினி படத்துக்கும் இப்படியொரு எதிர்பார்ப்பு கிளம்பியதில்லை. அந்தளவுக்கு கபாலி ஜூரம் உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து விட்டிருக்கிறது.

சில ஐடி நிறுவனங்கள் கபாலி படத்தை தங்கள் ஊழியர்கள் பார்ப்பதற்காகவே அலுவலகத்துக்கு ஒருநாள் விடுமுறை கொடுக்க முன் வருகிற அளவுக்கு கபாலி மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதற்கு ரஜினி ஒரு காரணம் என்றால், முதல் முறையாக இளம் இயக்குநர் பா.ரஞ்சித்தும் அவருடன் இணைந்திருப்பதும் இந்த உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணம்.

அப்படிப்பட்ட கபாலியின் வசூல் சல்மான்கானின் சுல்தான் ஹிந்திப் படத்தின் வசூலை கண்டிப்பாக முறியடித்து விடும் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஜூலை 6-ம் தேதி ரிலீசான சுல்தான் படம் முதல் மூன்று நாட்களில் 100 கோடியை வசூலித்தது. ஒரே வாரத்தில் 200 கோடியை தொட்டும் விட்டது. மேலும் இந்தப் படத்தில் வசூல் அடுத்தடுத்த நாட்களில் அமீர்கானின் பி.கே படத்தின் வசூலையும் மிஞ்சலாம் என்றும் பாலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கபாலி படம் சுல்தான் படத்தை விட 12,000 தியேட்டர்களில் ரிலீசாவதால் முதல் மூன்று நாட்களிலேயே 300 கோடி வசூலை அள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய நகரங்களை விட தென்னிந்திய நகரங்களில் உள்ள தியேட்டர்களின் டிக்கெட் விலை குறைவு தான் என்றாலும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் கபாலி ரிலீஸ் ஆவது அதன் வசூல் சாதனைக்கு பெரும் வலு சேர்க்கும் என்று தெரிகிறது.

சும்மாவா கபாலிடா… நெருப்புடா…

KabaliRajinikanthSultanகபாலிரஜினிரஜினிகாந்த்
Comments (0)
Add Comment