கைதி ஷார்ப்! பிகில் டாப்! ஆச்சர்ய ரிசல்ட்

கடந்த வாரம் வெளியான கைதி பிகில் படங்களில் எது டாப் என்ற டாக் பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்நிலையில் இரண்டு படங்களின் ரிசல்ட்டும் வந்துள்ளது. பிகில் படத்தைப் பொறுத்தவரையில் எதிர்மறை விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் வசூல் ரீதியாக இப்படம் ஒரு இமாலய பாய்ச்சலை எட்டி இருக்கிறது என்கிறார்கள். காரணம் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மற்றும் ட்ரைலர் ஏற்படுத்திய தாக்கம்.  முதல் மூன்றுநாள் வசூல் மட்டும் சுமார் 70 கோடி ரூபாயை எட்டி இருப்பதாக தகவல் வந்துள்ளது. கைதி படத்தைப்பொறுத்த வரை படத்திற்கு அட்டகாசமான பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனாலும் பேமிலி ஆடியன்ஸ் முதலில் வரவில்லை. ஆனால் தற்போது மவுத்டாக் மூலம் படம் பிக்கப் ஆகி வருகிறது. ஆக இந்தத்தீபாவளிக்கு களம் இறங்கிய இரண்டு படங்களுமே போதுமான வெற்றியைப் பெற்றிருக்கிறது

actor karthiActor VijayBigilKaithi
Comments (0)
Add Comment